2025 தேசிய பயிற்சி வாரத்தின் கற்றல் விழாவில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு

வரும் ஜூன் 14, 15ஆம் தேதிகளில் புக்கிட் ஜாலிலில் நடைபெறவிருக்கும் 2025 தேசிய பயிற்சி வாரத்தின் கற்றல் விழாவில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதவள அமைச்சின் ஆதரவுடன் எச்ஆர்டி கோர்ப் ஏற்பாடு செய்யும் தேசிய பயிற்சி வாரம் திட்டம் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

கல்வி, வாழ்க்கை முறை, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் இங்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன. இதனால் இந்த விழாவிற்கு மக்கள் ட் திரலாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆசியான் திறன் ஆண்டு 2025ஆம் ஆண்டுடன் இணைந்து தென்கிழக்கு ஆசிய வட்டாரத்திற்கு இப்பயிற்சி வாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பின்னணி அல்லது வயது வித்தியாசமின்றி அனைத்து மலேசியர்களுக்கும் இலவச கற்றல், பயிற்சிகளை பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

இவ்விழா இரண்டு நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். இவ்விழா குறித்த மேல்விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மக்கள் வலம் வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here