புக்கிட் ஜாலில் தேசிய அரங்கிற்கு வெளியே கைகலப்பில் ஈடுபட்ட ஐவர் போலீசாரால் கைது

2027 ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தின் போது புக்கிட் ஜாலில் தேசிய அரங்கிற்கு வெளியே கைகலப்பில் ஈடுபட்ட ஐவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டன்ட் ரிட்சுவான் காலிட் கூறினார்.

ஆட்டத்தின் போது அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டன்ட் ரிட்சுவான் காலிட் கூறினார். சந்தேக நபர்கள் முறையே 19 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா 4-0 என்ற கோல் கணக்கில் வியட்நாம் அணியை வீழ்த்தியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here