Jetstar Asia ஜூலை 31 முதல் செயல்பாடுகளை நிறுத்துகிறது

கோலாலம்பூர்:

சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் குறைந்த விலை விமான நிறுவனமான Jetstar Asia வரும் ஜூலை 31 ஆம் தேதியுடன் தனது செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நிறுத்தும் என்று அதன் தாய் நிறுவனமான குவாண்டாஸ் புதன்கிழமை வெளியிட்டொ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் சப்ளையர் செலவுகள், விமான நிலைய கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் பிராந்தியத்தில் குறைந்த விலை விமான நிறுவனங்களிடையே கடுமையான போட்டி ஆகியவற்றின் அழுத்தத்தின் பேரில் இந்த மூடல் முடிவு எடுக்கப்பட்டது என்று அது மேலும் கூறியுள்ளது.

இருப்பினும் Jetstar Asia அடுத்த ஏழு வாரங்களுக்கு தொடர்ந்து செயல்பட்டு ஜூலை 31 ஆம் தேதி முழுமையாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here