கெரிக்கின் தாசேக் பந்திங் அருகே 15 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த கோர விபத்தில் சிக்கிய பேருந்து, விபத்துக்கு முன்னர் நன்றாக இயங்கும் நிலையில் இருந்ததாக புஸ்பகோம் வெளியிட்ட ஆரம்ப தொழில்நுட்ப அறிக்கை தெரிவிக்கிறது.
விபத்துக்குப் பிந்தைய ஆய்வில், பேருந்தின் பிரேக்குகள், டயர்கள், ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் அனைத்தும் நல்ல நிலையில் இருந்ததாகவும், பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்ததாகவும் கண்டறியப்பட்டது. சோதனை, தொழில்நுட்ப விசாரணையின் அடிப்படையில், விபத்துக்குக் காரணமான இயந்திர அமைப்பு செயலிழப்புக்கான எந்த ஆதாரமும் இல்லை.
எனவே, விபத்து மனிதத் தவறு, சாலை நிலைமைகள் அல்லது இதே போன்ற வெளிப்புறக் காரணிகள் போன்ற பிற காரணிகளால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் அறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









