டெல்லிக்கு புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு – ஹாங்காங்கில் தரையிறக்கம்

ஹாங்காங்,ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9.46 மணிக்கு ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார்.

இதையடுத்து உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த விமானம் மீண்டும் ஹாங்காங் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here