நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு; லண்டன்- சென்னை விமான சேவை பாதிப்பு

சென்னை:

லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது. லண்டன்- சென்னை இடையே விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். புறப்பட்ட 37 நிமிடத்தில் மீண்டும் லண்டனில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் சென்னை வராமல் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது. தற்போது, லண்டன், சென்னை இடையே விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here