SSPN சேமிப்புக்கு 4.05 விழுக்காடு லாப ஈவு – PTPTN அறிவித்தது 10 ஆண்டுகளில் ஆக அதிகமானது .

கோலாலம்பூர்,

PTPTN எனப்படும் தேசிய உயர்கல்வி சேமிப்பு வாரியம் 2024ஆம் ஆண்டுக்கான SSPN சேமிப்பு எனப்படும் தேசியக் கல்வி சேமிப்புத் திட்டத்தின் லாப ஈவை அறிவித்தது. இம்முறை 4.05 விழுக்காட்டு லாப ஈவை பிடிபிடிஎன் அறிவித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக மிகி அதிகமானது என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டி ராஜா டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் அறிவித்தார்.

உயர்கல்வி அமைச்சின் வரவேற்பு முகப்பிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதுபோது உயர்கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ முஸ்தாபா சக்முட், PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம், PTPTN தலைமைச் செயல் அதிகாரி அமாட் டுசுக்கி அப்துல் மஜிட், உயர்கல்வி அமைச்சின் உயர் நிர்வாகத்தினர், PTPTN உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த லாப ஈவு மூலம் SSPN சேமிப்பில் கணக்கு வைத்துள்ள 6.77 மில்லியன் பேர் பயன்பெறுவர். இதற்காக 439.87 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2004ஆம் ஆண்டில் எஸ்எஸ்பிஎன் சேமிப்புத்  திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மொத்தம் 2.12 பில்லியன் ரிங்கிட் லாப ஈவுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது என்று 1% அவர் தெரிவித்தார்.இந்த லாப ஈவுத் தொகை SSPN சேமிப்புக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

டத்தோஸ்ரீ ஸம்ரி (இடமிருந்து 2ஆவது), டத்தோஸ்ரீ நோர்லிஸா (இடம்) மேலும் பிரமுகர்கள் 2024 எஸ்எஸ்பிஎன் சேமிப்பு லாப ஈவைக் காட்டுவதைப் படத்தில் காணலாம்.

இத்திட்டத்தில் பங்கேற்றிருப்பவர்கள் அவர் களின் சேமிப்பைச் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளலாம். 2023ஆம் ஆண்டில் 3.0 விழுக்காடு லாப ஈவாக அறி விக்கப்பட்ட நிலையில் 2024ஆம் ஆண்டில் 4.05 விழுக்காடு லாப ஈவு அறிவிக் கப்பட்டிருப்பது SSPN சேமிப்புத் திட்டத்தில் ஆகப் பெரிய தொகை என்று வர்ணிக் கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இதுவே ஆகப்பெரிய லாப ஈவு என்று குறிப்பிட்ட அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி, PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் தலைமையின் ‘நிர்வாகத் திறனைப் பிரதிபலிப்பதாக இந்த லாபாவு உள்ளது என்று சொன்னார். 2024ஆம் ஆண்டு SSPN சேமிப்பில் 3.17 பில்லியன் ரிங்கிட் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 24.37 மில்லியன் ரிங்கிட் அல்லது 0.77 விழுக்காடு கூடுதலாகும்.

2023இல் வைப்புத் தொகையில் 3.15 பில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டது. அதேசமயத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 5 லட்சம் புதிய கணக்குகள் திறக்கப்பட்டன. 2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை 6.77 மில்லியன் கணக்குகள் வழி 20.56 பில்லியன் ரிங்கிட் வைப்புத் தொகையாகப் பெறப்பட்டிருக்கிறது என்று டத்தோஸ்ரீ ஸம்ரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here