கெமாமனில் சக மாணவனை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது மாணவர்களுக்கு தடுப்புக் காவல்!

சுக்காய்:

கடந்த மாதம் ஒரு மாணவனைத் தாக்கியதாக நம்பப்படும் இங்குள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 147 இன் கீழ், மாவட்ட நீதிமன்ற நீதிபதி வான் சுஹைலா முகமது, இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்ததாக கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமது ராசி ரோஸ்லி தெரிவித்தார்.

14 வயது பாதிக்கப்பட்டவரிடமிருந்து காவல்துறைக்கு புகார் கிடைத்ததை அடுத்து, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது சந்தேக நபரின் காதலியாக பாதிக்கப்பட்டவரின் முன்னாள் காதலி இருப்பதால், முன்னாள் காதலியின் புகைப்படம் பாதிக்கப்பட்டவரிடம் இருப்பது பிடிக்காததால் இந்த கைகலப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.

“மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பல மாணவர்களால் குறித்த மாணவர் தாக்கப்பட்டதாகவும், இதனால் அவரது தலை மற்றும் முதுகில் காயங்கள் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here