11 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இஸ்லாமிய பெண்கள் உரிமைகள் அமைப்பான, Sisters in Islam (SIS) க்கு எதிரான சிலாங்கூர் இஸ்லாமிய மத மன்றத்தின் ஃபத்வாவைக் கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்யது.
SIS அமைப்பு இஸ்லாமிய மதப் போதனைகளிலிருந்து விலகிய அமைப்பு இல்லை என்று கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி Tun Tengku Maimun Tuan Mat தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட குழு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
கடந்த 2014-ஆம் ஆண்டு சிலாங்கூர் இஸ்லாமிய மத மன்றம் SIS அமைப்பு தவறான போதனைகளைக் கற்பிப்பதாகக் கூறி அதற்கு எதிராக 4 ஃபத்வா கொண்ட ஆணையைப் பிறப்பித்தது.
அதில் SIS அமைப்பு இஸ்லாமிய மதப் போதனைகளிலிருந்து விலகி தனிநபர் சுதந்திரத்தை வலியுறுத்தும் கொள்கையைப் பின்பற்றுவதாகவும் மற்ற மதக் கூறுகளைப் பின்பற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் SIS அமைப்பின் வழிக்காட்டல்களை விடுத்து இஸ்லாமிய மதக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் அந்த ஃபத்வாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.








