அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆக உயரிய James Beard சமையல் விருதை முதல் தமிழர் Chef விஜயகுமார் பெற்றுள்ளார்.
சமைக்க தொடங்கிய போது தமிழ்நாட்டை சேர்ந்த தான் இப்படி ஒரு இடத்தில் இருப்பதை நினைத்து கூட பார்க்கவில்லை. அக்கறையுடன், ஆர்வத்துடன் சமைத்த உணவுதான் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது என்று பெருமிதமாக கூறியுள்ளார்.
மேலும் அவர் நியூயார்க் நகரில் நிறுவிப் பாரம்பரிய தென்னிந்திய உணவைச் சமைத்து வழங்குகிறார்.
தமிழ்நாட்டின் மதுரையில் வளர்ந்த அவர், அங்கு வழக்கமாகச் சாப்பிட்ட சில பதார்த்தங்களை இப்போது உலகெங்கிலிருந்தும் வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்.
நத்தை பிரட்டல், இறால் தொக்கு ஆகிய உணவுகளை அவர் அனைத்துலக அளவில் பிரபலமாக்கியிருக்கிறார். சமையல் தொழிலை ஆரம்பித்தபோது தான் இந்தப் புகழைப் பெறுவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.









