சீனாவின் அன்ஹுய் (Anhui) மாநிலத்தைச் சேர்ந்த 64 வயது யாங் சிறுவயதில் விழுங்கிய பல்துலக்கி தமது உடலில் கண்டுபிடிக்கப்பட்டது

சீனாவின் அன்ஹுய் (Anhui) மாநிலத்தைச் சேர்ந்த 64 வயது யாங் சிறுவயதில் விழுங்கிய பல்துலக்கி தமது உடலில் இன்னமும் இருந்ததைக் கண்டறிந்தார்.

தமக்குத் தொடர்ந்து நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவச் சிகிச்சையை நாடி சிகிச்சையின்போது பிள்ளைகளுக்கான பல்துலக்கி அவரது சிறுகுடலில் இருந்தது தெரியவந்தது.

12 வயதில் தெரியாத்தனமாகப் பல்துலக்கியை விழுங்கிய அவர் தாயாரிடமிருந்து திட்டு வாங்காமல் இருப்பதற்கு அதனை மூடி மறைத்திருந்தார். பல்துலக்கி தமது உடலில் இயற்கையாகவே கரைந்துவிடும் என்று அவர் தவறாகக் கணித்ததில்

50 ஆண்டுகளுக்குப் பின்னர் பல்துலக்கி உடலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here