ஜூன் 28 ஊழல் எதிர்ப்பு பேரணிக்கான விண்ணப்பத்தை சமர்பித்த குழு

ஜூன் 28 ஆம் தேதி  ஊழல் எதிர்ப்பு பேரணி, சோகோ ஷாப்பிங் மாலின் முன்நடத்தும் திட்டம் குறித்து Sekretariat Rakyat Benci Rasuah இன்று காவல்துறையிடம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. அமைதி பேரணி சட்டம் 2012 இன் படி, பொதுக் கூட்டத்திற்கான சட்டத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், டாங் வாங்கி காவல்துறைக்கு இந்த விண்ணப்பம் வழங்கப்பட்டதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஃபக்ருர்ராஸி கைரூர் ரிஜால் கூறினார்.

நிர்வாகம், பொறுப்புக்கூறல் குறித்த பொதுமக்களின் கவலைக்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் பேரணியை விவரித்த குழு, அமைதியான கூட்டங்கள் ஜனநாயக வெளிப்பாட்டின் சட்டபூர்வமான வடிவம் என்று கூறியது. பொறுப்புக்கூறல், நீதியில் நம்பிக்கை கொண்ட அனைத்து மலேசியர்களும் ஜூன் 28 ஆம் தேதி எங்களுடன் நிற்க நாங்கள் வரவேற்கிறோம் என்று அது கூறியது. ஜனவரியில் இதேபோன்ற போராட்டத்தைத் தொடர்ந்து பேரணி நடைபெறுகிறது.

பிப்ரவரியில் அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பாணை சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், அதை சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் தௌஃபிக் ஜோஹாரியும் 15 அரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த குறிப்பாணையை பெற்றுக் கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here