கோலாலம்பூர்:
SRC இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து RM27 மில்லியன் பணமோசடி தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்து, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை இன்று உயர் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.
இந்த முடிவை உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி இன்று காலை அறிவித்தார்.
இவ்வழக்கில் நஜிப்பிற்கு வழங்கப்பட்ட விடுவிப்பு (DNAA)என்பது குற்றம் சாட்டப்பட்டவர் தற்காலிகமாக குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்பதாகும், ஆனால் வழக்குத் தொடுப்பவர் அதனை மீண்டும் நிலைநிறுத்த முடிவு செய்தால் எதிர்காலத்தில் அதே குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கடந்த வாரம் நஜிப்பின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லாஹ் பல வாதங்களை முன்வைத்தார். குறிப்பாக முந்தைய SRC விசாரணையில் பயன்படுத்தப்பட்ட வழக்குப் பொருட்களை சேகரிப்பதற்கான காலக்கெடுவை அரசுத் தரப்பு வழங்கத் தவறியது.
இதனால் நிலையான விசாரணை தேதிக்கு தெளிவான காலக்கெடு இல்லாமல் தனது கட்சிக்காரர் காத்திருப்பது நியாயமற்றது என்று அவர் வாதிட்டார். இதன் அடிப்படை நீதிபதி இன்று இம்முடிவை அறிவித்தார்.





















