சிப்பாங்:
ஈரான்-இஸ்ரேல் மோதல்கள் அரிகரித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 17 மலேசியர்கள் உட்பட மொத்தம் 24 நபர்கள் பாதுகாப்பாக நேற்று மலேசியா வந்தடைந்தனர்.
அவர்களை ஏற்றிவந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH781 இரவு 11.03 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) முனையம் 1 இல் தரையிறங்கியது.
வெளியுறவு அமைச்சகத்தின் துணைப் பொதுச் செயலாளர் (இருதரப்பு விவகாரங்கள்), டத்தோ அகமட் ரோஜியன் அப்துல் கானி ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.
நேற்று வந்தடைந்த குழுவில் 17 மலேசியர்கள், மலேசியாவில் வசிக்கும் ஆறு ஈரானியர்கள் மற்றும் ஒரு சிங்கப்பூர் நாட்டவர் ஆகியோர் உள்ளடங்குவர்.
இந்நிலையில் குறைந்தது 12 மலேசியர்கள் இன்னும் ஈரானில் உள்ளனர் என்றும், அவர்களின் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு பணிகள் விஸ்மா புத்ராவால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்றும்
ஈரானுக்கான மலேசிய தூதர் கைரி உமர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.




















