MyGOV மலேசியா செயலி- அரசாங்க சேவைகளுக்கான ஒற்றை டிஜிட்டல் நுழைவாயில் – கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

MyGOV மலேசியா செயலி-அரசாங்க சேவைகளுக்கான நாட்டின் ஒற்றை டிஜிட்டல் நுழைவாயிலாக செயல்படும் செயலி வரும் ஜூலை மாதம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி அரசாங்கத்தின் GovTech முயற்சியின் ஒரு பகுதி என்றும், மலேசியர்கள் ஒரே தளத்தின் மூலம் பல்வேறு பொது சேவைகளை அணுக இது அனுமதிக்கும் என்றும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.

இது மலேசியாவை டிஜிட்டல் தேசமாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறிய அவர், மலேசியர்கள் பல்வேறு அரசு நிறுவனங்களுடன் தடையின்றி கையாளக்கூடிய ஒரே தளமாக இது அமையும்.

இந்த செயலி கடப்பிதழ் விண்ணப்பங்கள், பிறப்பு மற்றும் குடியுரிமை பதிவு, ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரி புதுப்பித்தல், மருத்துவ சந்திப்புகள் மற்றும் பதிவுகள், சம்மன் கொடுப்பனவுகள், நில வரி மற்றும் மதிப்பீட்டு விகிதங்கள் மற்றும் STR ரஹ்மா உள்ளிட்ட ஏழு முக்கிய சேவைகளை இது வழங்கும் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.

MyGOV மலேசியா செயலி MyDigital ஐடியுடன் இணைக்கப்படும் என்றும், பயனர்கள் அரசாங்க சேவைகளைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பாக உள்நுழைந்து தங்கள் அடையாளங்களைச் சரிபார்க்க உதவும் என்றும் கோபிந்த் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here