‘தக் லைப்’ படத்திற்காக மணிரத்னம் மன்னிப்பு கேட்டாரா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

சென்னை,கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவான பான் இந்தியா அதிரடி திரைப்படமான ”தக் லைப்”, இந்த மாத தொடக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

நாயகன் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம்-கமல் மீண்டும் இணைந்ததால், ரசிகர்கள் மற்றொரு கிளாசிக் படத்தை எதிர்பார்த்தனர். இருப்பினும், ”தக் லைப்” படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், ”தக் லைப்” படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் இயக்குனர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக இணையத்தில் செய்திகள் பரவின. இந்த நிலையில் தக் லைப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் மணிரத்னம் அவர்கள் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here