கட்டுபாட்டை இழந்த வெல்ஃபயர் – 13 வயது சிறுமி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த துயரம்

வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (PLUS) தெற்கு நோக்கி KM189.1 இல்  இன்று காலை விபத்துக்குள்ளான டொயோட்டா வெல்ஃபயர் காரிலிருந்து 13 வயது சிறுமி ஒருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். காலை 7.54 மணிக்கு நடந்த இந்த விபத்தில், மேலும் நான்கு பேர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் போக்குவரத்து மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் படுகாயமடைந்தார். மற்ற மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஆயர் குரோவிலிருந்து ஜாசின் நோக்கிச் சென்ற வாகனம், அதன் டயர்களில் ஒன்று வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் அது அவசர பாதையில் நிறுத்தப்படுவதற்கு முன்பு சாலைப் பிரிப்பானில் மோதியது. இந்த விபத்தில் ஒரு பெண் பயணி நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கி இடது பாதையில் தூக்கி வீசப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த விபத்து PLUS நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here