காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 72 பேர் பலி

காசா:

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2023 முதல் தரை, கடல் மற்றும் வான் வழித்தாக்குல் மோதல் வருகிறது. இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் அதில் ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என இரு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து மீண்டும் போர் துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 174 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன் மூலம் போர் துவங்கியதில் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56,331 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,632 ஆகவும் அதிகரித்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here