E – Invoice அமலாக்கம் 3ஆவது கட்டத்தில் நுழைகிறது .

News By M.Anba

சைபர்ஜெயா, 

நாட்டில் டிஜிட்டல் வழிமுறையை வலுப்படுத்தி அரசாங்கத்தின் திட்டங்களுக்குத் தொடர்ந்து பக்கபலமாகவும் ஆதரவாகவும் இருக்கும் வகையில் HASÍL என்ற மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் அதன் இ-இன்வாய்ஸ் அமலாக்கத்தின் 3ஆவது கட்டத்தில் தடம் பதித்திருக்கிறது.

2025 ஜூலை 1 முதல் இந்த 3ஆவது கட்டம் அமலுக்கு வருகிறது. இதில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வரி செலுத்துவோர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆண்டிற்கு 5 மில்லியன் முதல் 25 மில்லியன் வரை வருமானம் பெறும் தரப்பினர் இந்த 3ஆவது கட்டத்தில் பங்குபெறுவர் என்று இங்கு சைபர்ஜெயாவில் உள்ள மெனாரா HASÍLலில் நடைபெற்ற 3ஆவது கட்டம் இ-இன்வாய்ஸ் அமலாக்க நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை வரி நடவடிக்கைப் பிரிவுத் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஷஹாருடி ஒஸ்மான் நிறைவு செய்து வைத்தார். இதில் HASÍL துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, உயர்நிலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். மேற்குறிப்பிட்ட தரப்பினருக்கு இ-இன்வாய்ஸ் அமலாக்கத்தில் தரப்பட்டிருந்த தளர்வு 2025 ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இரண்டாம் கட்டத்தில் மேற்குறிப்பிட்ட தரப்பினர் சம்பந்தப்படவில்லை.

இந்நிலையில் இத்தரப்பினர் 2025 ஜூலை 1 முதல் இ-இன்வாய்ஸ் அமலாக்கத்தில் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். இதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஷஸாருடி வலியுறுத்தினார். அதேசமயத்தில் டிஜிட்டல் போய்ன்ட் – ஆஃப் சேல் (POS) எனும் களத்தில் இலவசமான முறையில் மை இன்வாய்ஸ் இ-போஸ் முறையைப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

செய்தியாளர் சந்திப்பில் ஷஹாருடி நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். உடன் வரி நடவடிக்கைப் பிரிவு தலைமை அதிகாரி மர்ஸிடி ஜுலிக்கா, இ-இன்வாய்ஸ் பிரிவு இயக்குநர் டாக்டர் ரஷிடா சே ரோஸ்லி.
செய்தியாளர் சந்திப்பில் ஷஹாருடி நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். உடன் வரி நடவடிக்கைப் பிரிவு தலைமை அதிகாரி மர்ஸிடி ஜுலிக்கா, இ-இன்வாய்ஸ் பிரிவு இயக்குநர் டாக்டர் ரஷிடா சே ரோஸ்லி.

ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் வருமானம் பெறும் அல்லது 7 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் வியாபாரம் செய்யும் சிறு, நடுத்தர தொழில்முனைவோர் இத்திட்டத்தில் பங்கேற்கலாம். மை இன்வாய்ஸ் இ-போஸ் என்பது சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்பு வழிமுறையாகும் என்று தெரிவித்த அவர், இ-இன்வாய்ஸ் அமலாக்க நடைமுறைகளை இது எளிதாக்குகிறது என்றார்.

விற்பனைப் பதிவுகள், பொருட்களின் கையிருப்பு நிர்வாகம், நிதி அறிக்கை போன்றவற்றை ஒருங்கிணைக்கும் ஆற்றலை இது கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர் சிறு, நடுத்தர தொழில்முனைவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விரைந்து மை இன்வாய்ஸ் இ-போஸ் முறையைப் பயன்படுத்தும்படி நினைவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here