பள்ளிக் கல்விக்கு அப்பாற்பட்ட திட்டங்களின் மூலம் அடிப்படைக் கல்விக்கான எதிர்காலத் திறன்களை வடிவமைக்கிறது கம்பார் யுதார் கல்விக் கழகம்

கோலாலம்பூர், 

பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கு முந்தைய கல்வியை தேர்ந்தெடுக்கும்போது, மாணவர்களும் பெற்றோர்களும் வெறும் புத்தக அறிவை மட்டுமன்றி இன்னும் அதிகமானவற்றை நாடுகிறார்கள். அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும், நம்பிக்கையை வளர்க்கும், உண்மை உலகத் திறமைகளை ஊக்குவிக்கும் அர்த்தமுள்ள அனுபவங்களை மதிப்பிடுகிறார்கள்.

கம்பார் வளாகத்தில் உள்ள அடிப்படைக் கல்விக்கான மையம் (சிஎஃப்எஸ் பாடப்புத்தகங்கள் இது எதிர்கால சிந்தனையாளர்கள், புதுமையாளர்கள், மாற்றங்களை உருவாக்குவோரைக் கண்டறியும் பயணமாகும் இது. ஆக்ககரமான கல்வி முறையை வழங்குவதன் பொருட்டு, பள்ளி மாணவர் களை ஈர்த்து, கற்றலுக்கான ஆர்வத்தை வளர்க்கும் பல நடவடிக்கைகளை யுத்தார் மேற்கொண்டுள்ளது. அடிப்படைக் கல்வியின் முன்னணி வழங்குநராக மட்டுமல்லாமல், இளைஞச் வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் ஆக்கப்பூர்வ பங்களிப்பாளராகவும் தன்னை இந்தத் திட்டங்களின் மூலம் இக்கல்விக் கழகம் நிலைநிறுத்தியுள்ளது.

2025 ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் கம்பார் யுத்தார் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “அடுத்த தலைமுறை அறிவியல் 2025” என்ற புறச் செயற்பாட்டு திட்டம் இதில் குறிப்பிடத்தக்கது. யுத்தாரில் உள்ள கொன்ஃபூசியஸ் இன்ஸ்டிடியூட்டின் ஒத்துழைப்போடு, இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்வமுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொண்டு.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதப் பாடங்களை உள்ளடக்கிய ஸ்டெம் துறையின் அற்புதங்களைக் கண்டறிந்தனர். ஆக்கப்பூர்வமான காட்சிக்கூடங்கள், அறிவியல் ஆராய்ச்சி முயற்சிகள், உயிரோட்டமுள்ள அறிவியல் போட்டிகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. வத்தார் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், மாணவர் உதவியாளர்களுடன் கலந்துரையாடிய மாணவர்கள். அறிவியல் கண்டுபிடிப்பின் அதிர்வுகளை நேரடியாக உணர்ந்தனர்.

அடுத்த தலைமுறை அறிவியல் 2025 நிகழ்வின் வெற்றி, பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பத்திலேயே ஸ்டெம் துறைகளின் மீது ஆர்வத்தை வளர்க்கக்கூடியதாக அமைந்திருக்கிறது. அதேவேளையில் அறிவியல் அறிவாற்றல், புதுமைகளை ஊக்குவிக்கவும் உதவியது. 2024 அறிவாற்றல் புதிர் சவால் நிகழ்ச்சி மற்றொரு சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்தது. பேராக், சிலாங்கூர் மாநிலங்களில் உள்ள 35க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 380க்கும் மேற்பட்ட உற்சாகமிக்க மாணவர்களை இந்தப் புதிர்போட்டி ஈர்த்தது.

சிஎஃப்எஸ் கம்பார் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது. மாணவர்களின் பொது அறிவு. விரைவான சிந்தனைத் திறன், குழு வேலைத்திறனை பரிசோதிக்கும் ஓர் உற்சாகமான களமாக இது அமைந்தது. மேல் விவரங்களுக்கு www.utar.edu.my என்ற அகப்பக்கத்தை நாடலாம் அல்லது கம்பார் வளாகத்திற்கு: 05-468 8888 சுங்கை லோங் வளாகத்திற்கு: 03-9086 0288 என்ற எண்களின் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம். திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (பொது விடுமுறைகளில் மூடப்படும்) நேரில் வரலாம் அல்லது தொடர்புகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here