தனது முதலாளி 21,000 ரிங்கிட்டை திருடியதாக கூறிய பெண்ணின் பொய் அம்பலம்

தனது முதலாளி தன்னிடம் இருந்து 21,000 ரிங்கிட்டை திருடியதாகக் கூறிய ஒரு பெண்ணின் புகார் பொய்யானது என்று போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஜோகூரில் உள்ள கேலாங் பல் தான் திருடப்பட்டதாகக் கூறி 23 வயதான உள்ளூர் பெண் நேற்று பிற்பகல் 2.23 மணிக்கு புகார் அளித்ததாக இஸ்கந்தர் புத்ரி மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் எம். குமரேசன் தெரிவித்தார்.

புகார்தாரர் உண்மையில் பணத்தை தனிப்பட்ட செலவுகளுக்காகப் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். தவறான காவல் அறிக்கையை தாக்கல் செய்வது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 182 இன் கீழ் ஒரு குற்றமாகும் என்பதை குமரேசன் பொதுமக்களுக்கு நினைவூட்டினார். தவறான அறிக்கையை வழங்கியதாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை,2,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here