அலோர் ஸ்டார்:
கெடா மாநில சாலை போக்குவரத்துத் துறை (RTD) நேற்று நடத்திய சோதனையில், சீட் பெல்ட் அணியாத 16 அதிவேக மற்றும் சுற்றுலா பேருந்துப் பயணிகளுக்கு தலா RM300 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தச் சோதனை நீண்டதூர பஸ்களில் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சட்டப்படி சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்று, கெடா மாநில சாலை போக்குவரத்துத் துறை இயக்குநர் Stien Van Lutam கூறினார்.
இன்று 18 பஸ்கள் பரிசோதிக்கப்பட்டதில் 16 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களில் இருவர் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.





















