ஆசியா பகுதியை அணு ஆயுதமற்ற மண்டலமாக மாற்றும் நோக்கம்: வெளியுறவுத்துறை செயலாளர்

கோலாலம்பூர்:

தென்கிழக்கு ஆசியா, அணு ஆயுதமற்ற மண்டலமாக (SEANWFZ) இருக்க வேண்டும் என்பதில் ஆசியான் நாடுகள் உறுதியாக உள்ளன. சீனாவும் ரஷ்யாவும் இத்திட்டத்தில் இணைவதற்கான சம்மதத்தை வழங்கியுள்ளன என வெளியுறவுத் துறை செயலாளர் Amran Zin தெரிவித்தார்.

இந்த மண்டலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்குவது, சோதிப்பது, வைத்திருப்பது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இது மற்ற அணு ஆயுதமற்ற மண்டலங்களைவிட பரப்பளவில் அதிகமாகவும், தெற்காசிய கடலிலுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.

இந்நிலையில், ஜூலை 8-ம் தேதி நடைபெறும் SEANWFZ கமிஷன் கூட்டத்தில், அணு சக்தி நாடுகள் இத்திட்டத்தில் பங்கேற்பது தொடர்பான விவாதங்களும், தீமோர்-லெஸ்டே நாட்டின் இணைப்பு குறித்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த மண்டலத்தின் முக்கியத்துவம், இந்திய-பசிபிக் பகுதியில் மீளவும் பதற்றங்கள் அதிகரிக்கின்ற நிலையில் அதிகம் பேசப்படுகிறது. அணு ஆயுதங்களின் பரவலை தடுக்கும் வகையில், ஜப்பான் மற்றும் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் (IAEA) உடனும் ஆசியான் நாடுகள் ஒத்துழைப்பில் உள்ளன.

அணு சக்தி நாடுகளின் ஒப்புதலை பெற முயற்சிகள் தொடரும் நிலையில், பிராந்தியத்தில் சிவில் அணு ஆற்றல் வளர்ச்சி அதிகரிப்பதை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளும், IAEA வின் கண்காணிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here