பக்காத்தான் ஹராப்பானில் எந்த கட்சியின் ஆதிக்கமும் இல்லை – கிட் சியாங்

கோலாலம்பூர், செப்டம்பர் 27 :

பக்காத்தான் ஹராப்பானுக்குள் எந்த கட்சியின் ஆதிக்கமும் இல்லை என்று DAP கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், மஇகா கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணனின் கருத்துக்கு பதிலளிக்கும் முகமாக கூறினார்.

‘பக்காத்தான் ஹராப்பான் கூட்டு கட்சிக்கலுக்குள் எந்த ஆதிக்கக் கட்சியும் இல்லை, இது பாரிசான் நேஷனலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது, அங்குதான் அம்னோ அரசியல் மேலாதிக்கத்தை நடைமுறைப்படுத்துகிறது’.

அத்தோடு மஇகாவின் ஐந்தாவது தேசிய தலைவரும், மலேசியா சுதந்திரம் அடைந்த போது கட்சியை வழிநடத்தியவருமான துன் வி.டி சம்பந்தனது வீழ்ச்சிக்கும் அம்னோவின் மேலாதிக்கம் காரணமாக இருந்தது ” என்று லிம் செவ்வாயன்று (செப்டம்பர் 27) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

15வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றி பெற்றாலும் (GE15) டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமரானாலும், DAP கட்சியே நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதை தீர்மானிக்கும் என்ற மஇகா துணைத் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 25) வெளியிட்டிருந்த கருத்துக்கு லிம் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here