இஸ்மாயில் சப்ரிக்குச் சொந்தமான 169 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தைப் பறிமுதல் செய்ய எம்ஏசிசி மனு

கோலாலம்பூர், 

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்குச் சொந்தமான 169 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தைப் பறிமுதல் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது  இதற்கான மனுவை எம்ஏசிசி சார்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.

இதில் இஸ்மாயில் சப்ரி முதலாவது பிரதிவாதியாகவும் அவரின் முன்னாள் அரசியல் செயலாளர் டத்தோ முகமட் அனுவார் முகமட் யூனுஸ் இரண்டாவது பிரதிவாதியாகவும் அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மலேசிய அரசாங்கத்திற்காக அந்த முன்னாள் பிரதமரிடம் இருந்து 14,772,150 மலேசிய ரிங்கிட் 6,132,350 சிங்கப்பூர் டாலர்கள், 1,461,400 அமெரிக்க டாலர்கள், 3 மில்லியன் சுவிஸ் பிராங்க், 12,164,150 யூரோ டாலர்கள், 363,000,000 ஜப்பானிய யென், 50,250 பிரிட்டிஷ் பவுன்ட், 44,600 நியூஸிலாந்து டாலர்கள், 34,750,000 எமிரெட் திர்ஹாம், 352,850 ஆஸ்திரேலிய டாலர்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்வதற்காக எம்ஏசிசி நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்காக இந்த மனுவைச் சமர்ப்பித்திருக்கிறது.

இஸ்மாயில் சப்ரிக்குச் சொந்தமான இந்தப் பணத்தை முகமட் அனுவார் வைத்திருந்தார் என்பதில் ஆணையம் திருப்தி அடைகிறது. இதனையடுத்து 2009 எம்ஏசிசி சட்டம் பிரிவு 41 (1) கீழ் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here