விமானத்தில் திடீரென குழந்தைக்கு ஏற்பட்ட சுவாசக் கோளாறு: விரைந்து உதவிய AirAsia பணியாளர்கள்- தாயின் நெகிழ்ச்சி பகிர்வு

கோலாலம்பூர்,

Guangzhou விலிருந்து கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டிருந்த AirAsia விமானம் AK 115-ல் பயணித்த ஒரு மலேசிய தாயின் குழந்தைக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, விமான பணியாளர்கள் மற்றும் பயணிகள் எடுக்கும் அவசர நடவடிக்கைகள் அனைவரையும் நெகிழவைத்துள்ளன. .

இந்த சம்பவம் ஜூலை 4, 2026 அன்று காலை 5.55 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் நடந்தது. “எனது குழந்தைத் திடீரென மயக்கம் அடைந்தாள், முகம் சோர்வடைந்து உணர்வற்றுப்போயிருந்தது, நான் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன், பதறினேன் என தாயார் அந்த தருணத்தை பகிர்ந்துள்ளார்.

விமானம் புறப்பட்டதும் குழந்தை நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். புறப்பட்ட 1.5 மணி நேரத்திற்குப் பிறகு, நான் அவளை உணவூட்ட எழுப்பினேன். ஆனால், குழந்தை பெரும் சிரமபட்டு ஒரு நிமிடம் அழுதாள்; அதற்குப் பிறகு முழுமையாக அமைதியாகி, உடல் சோர்வடைந்து மயக்க நிலையில் சென்றுவிட்டாள்.

உடனே நான் விமான பணியாளர்களிடம் உதவி கேட்டேன். அவர்கள் உடனே ஆக்ஸிஜன் சப்போர்ட் கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர். அதைவிட தற்காலிகமாக விமானத்தின் பறக்கும் உயரமும் குறைத்துடன் விமானம் உடனடியாக Ho Chi Minh நகருக்கு திசைமாற்றமும் செய்யப்பட்டது.

பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து, விமானத்திலுள்ள பயணிகளிடம் மருத்துவ நிபுணர் யாராவது உள்ளார்களா என கேட்டனர். அங்கே ஒரு மருத்துவர் முன்வந்து, குழந்தையின் உயிரளவுகளைச் சரிபார்த்தார்.

விமானம் இறங்கும் வரை, பணியாளர்கள் குழந்தையின் கை, கால் மசாஜ் செய்தும், இதய துடிப்பை சரிபார்த்தும், பெற்றோருக்கு நம்பிக்கையளித்தும் தொடர்ந்த கவனிப்பில் இருந்தனர். விமானம் தரையிறங்கியதும், மருத்துவ குழு விமானத்திற்கு வந்து குழந்தையை பரிசோதித்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர்.

குழந்தையையும் என்னையும் நேராக ஆம்புலன்ஸ் வழி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். “அவர்கள் எவ்வளவு பரிவு காட்டினார்கள் என்று சொல்ல வார்த்தைகளே போதாது” என அந்த தாய் நெகிழ்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here