மே மாதம் வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.7 விழுக்காடு சரிவு .

புத்ராஜெயா, 

வேலையில்லாதோர் எண்ணிக்கை 2025 மே மாதம் 0.7 விழுக்காடு சரிவு கண்டது. ஏப்ரல் மாதம் 525,900 என்றிருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை மே மாதம் 522,400 பேராக குறைந்தது என்று மலேசிய புள்ளிவிவரங்கள் இலாகா தகவல் தெரிவித்தது.

ஏப்ரல் மாதத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை தொடர்ந்து 3.0 விழுக்காடாக இருந்தது என்பதை மலேசிய புள்ளிவிவரங்கள் இலாகா நேற்று வெளியிட்ட 2025 மே மாதத்திற்கான ஆள்பலம் குறித்த புள்ளிவிவரங்கள் காட்டின.

மே மாதம் வேலை செய்வோரின் மொத்த எண்ணிக்கை 0.3 விழுக்காடு அதிகரித்து 16.86 மில்லியனாக உயர்வு கண்டது என்று புள்ளிவிவர இலாகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் உஸிர் முஹிடின் கூறினார். ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 16.82 விழுக்காடாக இருந்தது. மலேசியாவின் ஆக்கப்பூர்வமான மேலும் ஊக்கமளிக்கும் பொருளாதார செயலாக்கம் வேலையில்லாதோர் எண்ணிக்கையைக குறைத்து வேலை வாய்ப்பு பெற்றவர்களின்எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கிறது என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் சொன்னார்.

இக்காலகட்டத்தில் தயாரிப்பு, நிர்மாணிப்பு, விவசாயம், சுரங்கம், குவாரி தொழில்துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று முகமட் உஸிர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here