3 வீடுகள் தீக்கிரையான வழக்கில் வட்டி முதலைகளின் 2 சந்தேக நபர்கள் கைது!

பினாங்கு,

பினாங்கு மாநிலத்தில் கடந்த ஜூன் 24ஆம் தேதி தாசெக் கெலுகோரில் மூன்று இரண்டுமாடி வீடுகள் தீக்கிரையாகிய சம்பவம் தொடர்பாக, இரண்டு வட்டிமுதலைகளின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 20 வயதுகளில் உள்ளவர்கள் எனவும், ஜூலை 3ஆம் தேதி இரு தனித் தனி சுற்றிவளைப்புகளில் பிடிபட்டனர் என்றும் பினாங்கு துணை போலீஸ் தலைமைச் செயலாளர் அல்வி ஸைனல் அபிடின் தெரிவித்தார்.

சுற்றிவளைப்பின்போது மோட்டார் சைக்கிள், தொலைபேசிகள், உடைகள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், இருவரும் தீவைத்த சம்பவத்திலும், மேலும் ஐந்து வீடுகளில் நிறப்பூச்சு வீசும் (paint-splashing) குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்து அதிகாலை 4.50 மணியளவில் ஏற்பட்டதாகவும், மூன்று வீடுகள் மற்றும் ஐந்து கார்கள், நான்கு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இழப்புகள் சுமார் RM300,000 ஆக மதிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here