சுமார் 55,000 வெள்ளி மோசடி – சுற்றுலா நிறுவனத்தின் பெண் குமாஸ்தா கைது செய்யப்பட்டார்

சிரம்பான்,

சுமார் RM55,000 பெறுமதியான ஹோட்டல் ஒன்றின் ஒதுக்கீட்டு செலவுகளுக்கான போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒரு சுற்றுலா நிறுவனத்தின் பெண் குமாஸ்தாவை நெகிரி செம்பிலானில் SPRM அண்மையில் கைதுசெய்து, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

20வயது சந்தேக நபரான அவர் நேற்று இரவு 9.30 மணியளவில் SPRM நெகிரி செம்பிலான் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வருகை தந்தபோது கைது செய்யப்பட்டதாக மூலத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட விசாரணைகளில், சந்தேக நபர் 2023 மார்ச்சிலிருந்து 2024 பிப்ரவரி மாதம் வரை நிறுவனம் சார்பான ஹோட்டல் செலவுகள் என கூறி, போலி தகவல்களைக் கொண்ட கடன் அட்டைக் கொடுப்பனவுகளுக்கான ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் உண்மையில் அந்த செலவுகள் அந்த நபரின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக செய்யப்பட்டதாக SPRM சந்தேகம் தெரிவிக்கிறது.

இன்று காலை செரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திம் அவருக்கு ஜூலை 22 வரை 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில், SPRM நெகிரி செம்பிலான் இயக்குனர் Awgkok Ahmad Taufik Putra Awg Ismail இந்த கைது தொடர்பான தகவலை உறுதிப்படுத்தியதோடு, இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டின் SPRM சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here