வேலைக்கு சென்ற நண்பருடன் சென்ற 14 வயது சிறுவன் பனை மரம் விழுந்து உயிரிழப்பு

பொந்தியான்,

ஜோகூர் மாநிலத்தின் பொந்தியான் பகுதியில், ஒரு பாலத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது, சிறுவன் ஒருவன் பனை மரம் விழுந்ததில் உயிரிழந்தார்.

நேற்று நிகழ்ந்த இந்த சம்பவத்தில், 14 வயதுடைய அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட காவல் தலைவர் ஷோஃபீ தயீப் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுவன் வடிகால் திருத்தும் வேலைக்குச் சென்ற தனது நண்பருடன் சேர்ந்து சென்று அருகிலுள்ள பாலத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, பனை மரம் முறிந்து விழுந்து இந்த துயர சம்பவம் ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

இதில் எந்தக் குற்றச்செயலும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு “திடீர் மரணம்” (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here