கோலாலம்பூர் :
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி, நெகிரி செம்பிலானின் நீலாய் பகுதியில் காற்றுத்தூய்மைக்கேடு (API 153) அதிகளவில் பதிவானது.
இது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கக்கூடும் என சுற்றுச்சூழல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலாய் தவிர ஏனைய மூன்று பகுதிகளிலும் காற்றின் தரம் மாசடைந்துள்ளது. அவற்றில் சிலாங்கூரின் ஜொஹான் செத்தியா, மற்றும் நெகிரி செம்பிலானின் சிரம்பானில் API 152 ஆக பதிவாகியுள்ளது. அதேநேரம் பகாங்கின் பாலோக் பாரு குவந்தானிக் API 132 ஆக பதிவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட காற்று மாசு குறியீட்டு (APIMS) தகவல்படி, காற்று மாசு குறியீடு (API) 101-200 அளவுக்கு உள்ளது.
எனவே தேவையற்று வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்த்து கொள்ளுமாறும், முகக்கவசம் அணியுமாறும் அது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



















