இந்துக்களை, அவர்களின் வழிபாட்டு முறைகளை, சமயத்தை ஸம்ரி வினோத்தும் ஃபிர்டாவுஸ் வோங்கும் இழிவுப்படுத்தியது போன்று வேறு எவரும் செய்தது இல்லை. இதை மலேசிய இந்துக்கள் மட்டுமன்றி அனைத்து இனத்தவர்களும் மிகத் தெளிவாக உணர்ந்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் இன்று செவ்வாய்க்கிழமை அளித்த ஒரு பதிலில், சட்ட அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் இந்த இருவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அட்டர்னி ஜெனரல் அலுவலகம் முடிவு செய்திருப்பதாக கூறி இந்துக்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறார்.
அமைச்சரின் இந்த பதிலால் மலேசிய இந்துக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.
மலேசிய இந்துக்களையும் இந்து சமயத்தையும் இனி யார் வேண்டும் என்றாலும் சுதந்தரமாக விமர்சிப்பதற்கு, இழிவுபடுத்துவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் லைசென்ஸா? என்ற கேள்வியும் பரவலாக எழுந்திருக்கிறது.




















