ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ஸ் வோங் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்ற அரசாங்க முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்து சமயத்தை தொடர்ந்து இழிவுபடுத்திய ஜம்ரி வினோத் மற்றும் ஃபிர்டாவ்ஸ் வோங் மீது நூற்றுக்கணக்கான புகார்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், போதுமான ஆதாரங்கள் இல்லை என ஏஜிசி தெரிவித்துள்ளது. இதனை பிரதமர் துறையின் சட்டத்துறை அமைச்சர் அஸாலினா மக்களவையில் உறுதி செய்தார்.
இந்த முடிவு ஒட்டுமொத்த இந்து சமூகத்துக்கு பெரிய அதிர்ச்சியாகும் என்றும், 3ஆர் விதிகள் ஒரு மதத்துக்காக மட்டுமா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார்.
“எந்த மதம் இழிவுபடுத்தப்பட்டாலும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதத்தை இழிவுபடுத்தியவர்களையும் அரசு விலக்க முடியாது,” என நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார்





















