திரெங்கானு,
DUNGUN அருகே Kerteh பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட சாலை விபத்தில், 25 வயதான ஒரு தாயும், 18 மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயமடைந்தனர்.
நூர் சுஹைல்லா அஸ்மான் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 18 மாதக் குழந்தையான நூர் ஐரா ஹுமைரா மோஹமட் ஷாரூல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக துங்குன் மாவட்ட காவல்துறை தலைவர் மைசூரா அப்துல் காதிர் கூறினார்.
விபத்தில் மோதிய காரில் இருந்து தப்பிய, (நூர் சுஹைல்லாவின்) கணவர், 32 வயதான ஷாரூல் நிசாம் ஹம்சா மற்றும் அவர்களது மூன்று வயது மகள் நூர் ஐஸ்யா ஹுமைரா சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மற்ற இரண்டு பேர், பெரும் காயங்களுடன் துங்குன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்தக் குடும்பதினர் துங்குனில் இருந்து ஃபெல்டா கெர்தே 4 பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஜாலான் கிலாங் கிளாப்பா ஸாவித் சாலையில் விபத்து ஏற்பட்டதாக காவல்துறைத் தகவலில் கூறப்பட்டுள்ளது.மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.




















