சிபு:
சுங்கை நங்கா பெகத்தான் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோது காணாமல் போன ஒருவர், இன்று உயிரிழந்த நிலையில் சாதகமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர 50 வயதான மைக்கேல் ஜன்டான் என்று அடையாளம் காணப்பட்டதாக பின்டாங்கோர் தீயணைப்பு நிலையத் தலைவர் மக்முடின் நருடின் கூறினார்.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (ஜூலை 26) இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாகவும், இதுகுறித்து ஜுலாவ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது என்றும் கூறினார்.
இந்நிலையில் சுங்கை மேரா தீயணைப்பு நிலைய மீட்பு குழு (PPDA) வீரர்களால் இன்று காலை 9.08 மணிக்கு ஆற்றின் அடியில் மரணமடைந்த நிலையில்அவர் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.




















