அரசாங்கத்தின் 100 ரிங்கிட் உதவித் திட்டம்: 24 மணி நேரம் செயல்படும் கே.கே.சூப்பர் மார்ட்டிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்த 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கு அடையாள அட்டை வழியாக 100 ரிங்கிட் ஒரு முறை சிறப்பு உதவித் திட்டத்தை வரவேற்பதாக  கே.கே.சூப்பர் மார்ட் ஸ்தாபகர் டத்தோஶ்ரீ கே.கே.சாய் தெரிவித்தார்.  அரசாங்கத்தின் இந்த திட்டத்தில்   KK சூப்பர் மார்ட் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஆகஸ்ட் 31, 2025 முதல் மலேசியர்கள் கே.கே.சூப்பர் மார்ட்டில் பொருட்களை வாங்கத் தொடங்கலாம்.

இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் ரஹ்மா பண பங்களிப்பு (STR) கட்டம் 1 முயற்சியிலிருந்து தொடங்கி, பின்னர் அடிப்படை ரஹ்மா பங்களிப்புத் திட்டம் (SARA) மூலம் உதவியை விரிவுபடுத்துவதன் மூலம், தேவைப்படுபவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்க அரசாங்கம் எப்போதும் உறுதிபூண்டுள்ளதை இதன் வழி அறிய முடிகிறது. இந்த முயற்சியின் வழி 24 மணி நேரம் செயல்படும் கே.கே. சூப்பர் மார்ட் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான ஒரு தளமாகவும் மக்களின் விருப்பமாகவும் மாறியுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிறுவனங்களில் கிடைக்கும் மைகாசே அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் STR மற்றும் SARA பெறுநர்கள் ரொக்கமில்லா அடிப்படைத் தேவைகளைப் பெறுவார்கள் என்பதால் கே.கே.சூப்பர் மார்ட் மைகாசேவுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளது.

கே.கே.சூப்பர் மார்ட்டில் சாரா திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 13 வகை அடிப்படைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இவற்றில் அரிசி, ரொட்டி, முட்டை, சமையல் எண்ணெய், மாவு, பிஸ்கட், உடனடி நூடுல்ஸ், பானங்கள், சுவையூட்டிகள், சுகாதாரப் பொருட்கள், மருந்துகள், பள்ளிப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

கே.கே. சூப்பர் மார்ட் எப்போதும் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்பதோடு அரசாங்கத்தின் உதவித் திட்டத்தை ஆதரிப்பதில் செயல்படுத்தும்  வலையமைப்பில் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சாரா திட்டத்தில் ஈடுபட்டுள்ள தயாரிப்புகள் மற்றும் கிளைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.kksupermart.my என்ற எங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ அல்லது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களில் கூடுதல் விவரங்களைப் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here