சுக்காய், ஜூலை
Kemamanபகுதியைச் சேர்ந்த ஓர் அரசு ஊழியர், போலி சுற்றுலா முதலீட்டு திட்டத்தில் சிக்கி RM82,196 இழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.
41 வயதான அந்த நபர், வாட்ஸ்அப் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முதலீட்டு திட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதில் கிடைக்கும் உயர்ந்த வருமான வாக்குறுதியால் கவரப்பட்டு ஜூலை 10 முதல் 27 வரை மூன்று வங்கி கணக்குகளுக்கு 10 முறை பணம் பரிமாற்றம் செய்ததாக கெமமான் மாவட்ட போலீஸ் தலைவர் மொகமட் ரசி ரஸ்லி கூறினார்.
வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானத்தை பெறுவதில் ஏமாற்றம் கிடைத்த பிறகு அவர் நேற்று மாலை போலீஸில் புகார் பதிவு செய்தார்,” என்று அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், முதலீட்டு தொடர்பான எந்த நிறுவனத்தையும் முதலீடு செய்யும் முன், Bank Negara Malaysia (BNM) மற்றும் Securities Commission Malaysia (SC) ஆகியவற்றின் வாயிலாக சரிபார்த்துப் பார்க்க வேண்டியது அவசியம் என போலீசார் பொதுமக்களுக்கு வலியுறுத்துகின்றனர்.






















