கோலாலம்பூர்:
தனது மனைவியின் பராமரிப்பில் இருந்த 9 மாத குழந்தையை வன்புணர்வு செய்து, கொலை செய்ததாக 40 வயதான வேலையில்லாத பத்ருல்தீன் முகமட் என்ற ஆடவருக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் கடும் தண்டனையை விதித்து, தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் கொலை செய்ததற்காக 30 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 13 பிரம்படிகள் விதித்தும், பாலியல் குற்றத்துக்காக 10 ஆண்டு சிறை மற்றும் ஒரு பிரம்படி தண்டனையும் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றவாளி கடந்த 2021 ஏப்ரல் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அதே நேரத்தில் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
வழக்கில், பத்ருல்தீனின் DNA மற்றும் விந்தணுக்கள் குழந்தையின் பெருங்குடல் மற்றும் ஆசனவாயில் கண்டுபிடிக்கப்பட்டு, அவரின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது.
சுங்கை பூலோ மருத்துவமனையின் தடயவியல் நிபுணர் டாக்டர் ரோஹாயு ஷஹார் அட்னான் மேற்கொண்ட பிரேத பரிசோதனையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் ஆசனவாயிலில் மழுங்கிய பொருளால் ஏற்பட்ட காயங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.





















