டிஜிட்டல் மயமாக்கல், வேலைவாய்ப்புகள் மற்றும் AI தொழிநுட்பங்களுக்காக சீனாவிடமிருந்து RM2.97 பில்லியன் முதலீடு: அமைச்சர் கோபிந்த் சிங்

கோலாலம்பூர்;

டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தலைமையில் சீனாவில் நடைபெற்ற உயர் மட்ட மாநாட்டில், மலேசியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் மலேசியா முன்னணி நாடாக வளர்ந்து வரும் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியது.

இச்சுற்றுப் பயணம், 2025 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டுடன் (WAIC) இணைந்து நடைபெற்றது. இதில், RM2.97 பில்லியன் மதிப்பிலான சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகள் உறுதிப்படுத்தப்பட்டன, மேலும் 6,800-க்கும் மேற்பட்ட உயர் தர டிஜிட்டல் வேலைவாய்ப்புகள் மலேசியாவில் உருவாக உள்ளன.

இந்த முதலீடுகள், AI தொழில்நுட்ப மையங்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள், புதுமையான AI தளங்கள் மற்றும் புதிய தலைமுறை டிஜிட்டல் அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்குவதை உள்ளடக்கியது.

முதலீடு செய்த முக்கிய நிறுவனங்களில் Baidu (Wisetech வழியாக), Tsing Digital, iSoftStone, Inspur Group, China Mobile International, மற்றும் China Unicom ஆகியவை அடங்கும்.

இவை அனைத்தும், மலேசியாவின் டிஜிட்டல் கனவுகளை ஆதரிக்கவும், நாட்டின் தொழில்நுட்ப சூழலை வலுப்படுத்தவும் துணைபுரிகின்றன.

Malaysia Digital (MD) முயற்சியின் வெற்றியும், மலேசியாவின் உலகளாவிய டிஜிட்டல் போட்டித்திறனையும் மேம்படுத்துவதிலும் இது முக்கிய ஒத்துழைப்பாக விளங்குகிறது.

மலேசியாவை ASEAN-இல் டிஜிட்டல் கண்டுபிடிப்பிற்கான மையமாக மாற்றும் நோக்கில், மேலும் பல புதுமை மையங்களை நிறுவ சீன நிறுவனங்களை டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் அழைத்தார்.

AI நுண்ணறிவு முகவர்கள் (AI agents) — தானாகவே முடிவெடுக்கக்கூடிய சிஸ்டம்கள் — எதிர்கால டிஜிட்டல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும்.மக்கள் நம்பிக்கையைப் பெற, AI சான்றிதழ் அமைப்புகள் (certification frameworks) உருவாக்க வேண்டும்.மலேசியா, 2025 ASEAN தலைவர் நாட்டாக இருக்கும்போது, ASEAN AI பாதுகாப்பு வலையமைப்பை (ASEAN AI Safety Network) அறிமுகப்படுத்தும் என அவர் தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, புதிய சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் உருவாக்கப்படும் எனவும், இவை வளர்ச்சியும் பாதுகாப்பும் இணைந்து செல்லும் சூழலை உருவாக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here