வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி திருடியதாக ஈரானியர்கள் கைது

ஜோர்ஜ் டவுன்,

சுற்றுலா பகுதிகளில் வெளிநாட்டு பயணிகளை இலக்காகக் கொண்டு அவர்களை ஏமாற்றி திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு தம்பதிகள் உட்பட ஐந்து ஈரானியர்கள் கைது செய்யப்பட்டு நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருட்டு குற்றச்சாட்டில் (பிரிவு 379, குற்றவியல் சட்டம்) விசாரணை மேற்கொள்வதற்காக, ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை அவர்கள் மீது நீதிமன்றம் காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பேர்வழிகளில் இரு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் அடங்குவர். அவர்களுடைய வயது 19 முதல் 34 வரை உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் நேற்று இரவு 8 மணி முதல் 9 மணிக்குள், Persiaran Gurney மற்றும் and Pulau Tikus பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

கைது நடவடிக்கையின் போது, சந்தேகத்தினர் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் மற்றும் திருடப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வேலை எதுவும் இல்லாதவர்களாகக் கூறப்படும் இவர்கள், சுற்றுலா பயண விசாவை பயன்படுத்தி கடந்த ஜனவரி மாதம் மலேசியாவுக்குள் வந்துள்ளதாகவும், அந்த நேரத்திலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு திருடும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here