சிலாங்கூரில் ‘Tekong Darat’ கண்காணிப்பு நடவடிக்கைகள்: எட்டு மலேசியர்கள் உட்பட 15 பேர் கைது

கோலாலம்பூர்,

2025-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 4 வரை, ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் (ATIPSOM) கீழ் சிலாங்கூரில் நடைபெற்ற சோதனைகளில், “தேக்கோங் டாராட்” என அழைக்கப்படும் சட்டவிரோதக் கடத்தல்களில் முக்கிய பங்காற்றிய 15 பேர், அவர்களில் எட்டு மலேசியர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது நடவடிக்கைப் படை (GOF) மத்திய பிரிகேட் தளபதி எஸ்.ஏ.சி. ஹக்கிமால் ஹவாரி வெளியிட்ட அறிக்கையின் பேரில், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஏழு தேக்கோங் டாராட் மற்றும் 224 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஜூன் 21 மற்றும் ஜூலை 22-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட இரு முக்கிய சோதனைகளில், 10.355 கிலோகிராம் ஷாபு மற்றும் 3.6 கிலோகிராம் எக்ஸ்டசி மாத்திரைகள் உட்பட, மொத்தம் RM1.5 மில்லியன் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிலாங்கூர் கடற்கரை மற்றும் ஜோகூரின் மேற்கு கடற்கரை பகுதியை மையமாகக் கொண்டு, கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான பல்வகை வியூகங்களை பி.ஜி.ஏ. அணுகியதன் விளைவாக இச்சாதனைகள் சாத்தியமாகியுள்ளன.

இதே காலக்கட்டத்தில் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 288 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,005 பேர் கைது செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு RM1.1 பில்லியன் (110 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here