மலேசியாவின் சமாதான முயற்சிக்கு தாய்லாந்து, கம்போடியா பாராட்டு

கோலாலம்பூர்,

தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கிடையிலான எல்லை மோதலுக்குத் தீர்வு காணும் முயற்சியில் மலேசியா மேற்கொண்ட மத்தியஸ்த பங்கு குறித்து இருநாடுகளும் நன்றியுடன் பாராட்டு தெரிவித்துள்ளன.

தாய்லாந்தின் இடைக்கால பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நட்டபோன் நார்க்பனிட், மலேசிய அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்ததாக தெரிவித்தார்.

கம்போடியா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் டியா செய்ஹா உடனான எல்லை பாதுகாப்பு குழு கூட்டத்தில் இக்கூற்றுகளை வெளியிட்டார்.

இக்கூட்டத்தில் மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுடின், பாதுகாப்பு துணை அமைச்சர் அட்லி மற்றும் படைத்தலைவர் ஜெனரல் முகமட் நிசாம், அமெரிக்க, சீன தூதர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் உடனான நல்வாழ்த்து சந்திப்பும் நடத்தப்பட்டதாகவும், ஆசியான் வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்ட கூட்டுத் தூதுரையாக மலேசியா செயல்பட்டதற்காக கம்போடியா நன்றியுடன் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மே 28ல், பிராஹ் விகேர் எல்லைப் பகுதியில் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்ததை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here