கோலாலம்பூர்,
செர்டாங் லே-பை (Lay-by) 308.20வது கிலோமீட்டரில் தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அது ஆகஸ்ட் 11 முதல் 15 வரை இரவு நேரங்களில் தற்காலிகமாக மூடப்படும் என பிளஸ் மலேசியா (PLUS Malaysia) தெரிவித்துள்ளது.
இப்பராமரிப்பு காலத்தில், அந்த லே-பையின் நுழைவுப் பாதை, உணவகங்கள் மற்றும் ஓய்வறைகள் ஆகியவை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செயல்படாது.
இந்த வேலைகள், நெடுஞ்சாலை உள்கட்டமைப்பையும், பயனர் வசதிகளையும் மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகின்றன என பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலை பயனர்கள், தங்கள் பயணத்தை முன்னமே திட்டமிடவும், போக்குவரத்து வழிமுறைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், போக்குவரத்து நிலை தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற, பிளஸ் செயலி (PLUS App), புத்ரி மெய்நிகர் உதவியாளர், X@plustrafik, மின்னணு அடையாளப் பலகைகள் மற்றும் பிளஸ் லைனைப் பயன்படுத்த வாகன ஓட்டுநர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.





















