பிகேஆரின் அதிகாரப்பூர்வ உறுப்பினரானார் தெங்கு ஜஃப்ருல்

பிகேஆரில் சேருவதற்கான தனது விண்ணப்பம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். முதலீடு, வர்த்தகத்  தொழில்துறை அமைச்சரான அவர் இப்போது பிகேஆரின் அம்பாங் பிரிவில் உறுப்பினராக இருப்பதாகக் கூறினார்.

எனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான தேதி எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அது இரண்டு வாரங்களுக்கு முன்பு கட்சியின் மத்திய தலைமைக் குழுவின் கூட்டத்தின் போது நடந்தது, என்று அவர் இன்று எக்ஸ்போ 2025 ஒசாகா மலேசியா பெவிலியனுக்கு விஜயம் செய்தபோது மலேசிய ஊடகங்களுக்கு தெரிவித்தார். மே 30 அன்று, தெங்கு ஜஃப்ருல் அம்னோவிலிருந்து ராஜினாமா செய்வதை அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here