இராணுவ உபகரணங்களை வாங்குவதில் அரசாங்கத்திற்கு – அரசாங்க ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதை பாதுகாப்பு அமைச்சகம் விரிவுபடுத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்தார். முகவர்கள் அல்லது இடைத்தரகர்களைப் பயன்படுத்து தவிர்க்கப்படும் என்றும், தேசிய பாதுகாப்பு சொத்துக்களை வாங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.
இராணுவ கொள்முதலில் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பது குறித்து மாமன்னர் முன்னதாக வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, புதிய திட்டங்கள் இறுதி பயனர், அதாவது ஆயுதப்படைகள் சம்பந்தப்பட்ட விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் பொருத்தம், ஆயுட்காலம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றின் அம்சங்களை உள்ளடக்கும் என்றும் காலிட் கூறினார்.
பாதுகாப்பு சொத்துக்களின் எந்தவொரு கொள்முதல் ஆயுதப்படைகளின் தேவைகள் அல்லது பயனர் உந்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்று அவர் கூறினார். எந்தவொரு கொள்முதலையும் உறுதிப்படுத்துவதற்கு முன், செலவழித்த ஒவ்வொரு ரிங்கிட்டும் சரியான விலையில் இருப்பதை உறுதிசெய்ய உண்மையான சந்தை விலையின் விரிவான மதிப்பீடு செய்யப்படுகிறது என்று காலித் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இராணுவ கொள்முதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும், முகவர்கள் அல்லது சுயநலம் கொண்டவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், சந்தை விலைகள், ஆயுதப் படைகளின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் மதிப்பீடுகள் வெளிப்படையாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறியிருந்தார்.









