விநாயகர் வழிபாட்டிற்கு ஏற்ற 22 வகையான மலர்களும் பலன்களும்

விநாயகப் பெருமான் மிக எளிமையான கடவுள். அதனால் அவரை எப்படி வழிபட்டாலும் அவர் மன மகிழ்ந்து நமக்கு அருள் புரிவார். இருந்தாலும் அவரை வழிபடுவதற்கு ஏற்ற மலர்கள் பற்றியும் அவற்றால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

விநாயகர் வழிபாட்டிற்கு ஏற்ற மலர்களும், பலன்களும் :

1. புன்னை – புன்னை மரத்தில் பூக்களை படைத்து வழிபடுவதால் நோய்கள் குணமாகும். திருமணத் தடை செல்வம் பெருகும். துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

2. மந்தாரை – மந்தாரை பூவை படைத்து வழிபடுவதால் செல்வ செழிப்பு உண்டாகும். நோய்கள் நீங்கும். மன அமைதி கிடைக்கும். ஆன்மீக முன்னேற்றம், திருமண யோகம் ஆகியவை கிடைக்கும்.

3. மகிழம் – மகிழம் பூ படைத்து வழிபடுவதால் மன அமைதி, மகிழ்ச்சி, ஐஸ்வர்யம், , சத்ரு நாசம், ஆரோக்கியம் ஆகியவை உண்டாகும்.

4. பாதிரி – பாதிரிப்பூ படைத்து வழிபடுவதால் கடன்கள் தீரும். நன்மைகள் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். எடுக்காத புண்ணிய கதி உண்டாகும். நல்ல எண்ணம் கொண்ட விருப்பங்கள் நிறைவேறும். சுகமான வாழ்க்கை கிடைக்கும்.

5. அரளி – அரளிப்பூ படைத்தால் கடன் நீங்கும், குடும்ப ஒற்றுமை, மன அமைதி ஏற்படும்.

6. ஊமத்தை – ஊமத்தைப்பூ படைத்து வழிபட்டால் பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும். மன அமைதி கிடைக்கும்.

7. சம்பங்கி – சம்பங்கி பூ படைத்து வழிபட்டால் மன அமைதி, மகிழ்ச்சி, நன்மைகள் கிடைக்கும்.

8. மாம்பூ – மாம்பூ படைத்து வழிபடுவதன் மூலம் மங்கள நிகழ்வுகள் நடைபெறும், அதிர்ஷ்டத்தை தரும். வளம், செழுமையை தரும்.

9. எருக்கம்பூ – எருக்கம்பூ படைத்து வழிபடுவதால் எதிர்மறை சக்திகள் விலகி, குறைகள் நீங்கும், மகிழ்ச்சி, செல்வம் ஆரோக்கியம் கிடைக்கும்.

10. முல்லை – முல்லை பூ படைத்து வழிபடுவதால் தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும். எண்ணங்கள் ஈடேறும்.

11. கொன்றை – கொன்றை படைத்து வழிபடுவதால் தடைகள் நீங்கும். ஆற்றல் பெருகும், வாழ்வில் செழிப்பு உண்டாகும். மன அமைதியும், பக்தியும் அதிகரிக்கும்.

12. தாமரை – தாமரை படைத்து வழிபடுவதால் தடைகள் விலகும். தடைகளற்ற வெற்றி கிடைக்கும். செல்வ வளம் உண்டாகும். தூய்மையான பக்தி, செழிப்பு ஆகியவற்றை பெற முடியும்.

13.செங்கழுநீர் – செங்கழுநீர் படைத்து வழிபட்டால் காரிய தடைகள் விலகும், வெற்றியும், செல்வ செழிப்பும் பெருகும். இத விநாயகருக்கு மிகவும் விருப்பமான மலராகும்.

14. செவ்வரளி – செவ்வாரளி பூ படைத்து வழிபடுவதால் தடைகள் நீங்கி, மங்கள காரியங்கள் நடைபெறும்.

15.செண்பகம் – செண்பக பூ படைத்து வழிபடுவதால் ஞானம், அறிவு, செல்வ வளம் பெருகும். விநாயகரின் அருள் கிடைக்கும். தடைகள் நீங்கும்.

16. வில்வம் – வில்வம் பூ படைத்து வழிபட்டால் தொழில் மற்றும் அரசியலில் வெற்றி கிடைக்கும். அதிகார பதவி, நிதி ரீதியாக வளர்ச்சி, ஆன்மிக வளர்ச்சி ஆகியவை கிடைக்கும்.

17. குருந்தை – குருந்தை பூ படைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும். மன அமைதி கிடைக்கும். தீமைகள் நீங்கும். விநாயகரின் அருளால் எண்ணங்கள் ஈடேறும்.

18. பவளமல்லி – பவளமல்லி பூ படைத்து வழிபடுவதால் மனதில் நேர்மறை எண்ணங்கள் வளரும். ஞானம் பெருகும். அறிவின் துணை கிடைக்கும். தீமைகள் விலகும்.

19. ஜாதிமல்லி – ஜாதிமல்லி பூ படைத்து வழிபடுவதால் மன அமைதி, செல்வ வளம் கிடைக்கும். தீமைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

20. மாதுளம் – மாதுளம் பூ படைத்து வழிபட்டால் ஞானம், அறிவு, செல்வம், வெற்றி கிடைக்கும்.

21. கண்டங்கத்திரி – கண்டங்கத்திரி பூ படைத்து வழிபடுவதால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். விநாயகரின் அருளால் துன்பங்கள் நீங்கி, சுகமான வாழ்க்கை அமையும்.

22. செம்பருத்தி – செம்பருத்தி பூ படைத்து வழிபட்டால் மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here