கொடுமைப்படுத்தல் வழக்கு: 6 மாணவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுதலை

கிளந்தான், பாசீர் மாஸில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கொடுமைப்படுத்துதல் வழக்கு தொடர்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நான்காம் படிவ மாணவர்கள் ஆறு பேர் இன்று காலை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் மேலதிக உத்தரவுகள் வரும் வரை அவர்கள் விடுவிக்கப்பட்டதாக பாசீர் மாஸ் காவல்துறைத் தலைவர் காமா அசுரல் முகமது தெரிவித்தார்.

ஆறு மாணவர்களுக்கான தடுப்புக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. முதலில் அவர்களை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கிறோம் என்று அவர் கூறியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டிருந்தது. முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை மூன்றாம் படிவ மாணவர் காயமடைந்ததாகவும் அவரது பேண்ட் கீழே இழுக்கப்பட்டதாகவும் கூறியதை அடுத்து, ஆறு நான்காம் படிவ மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அனைத்து சிறுவர்களும் ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here