முன்னாள் தேசியத் தலைவரின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது

கோலாலம்பூர்:

முன்னாள் தேசியத் தலைவரின் மகன், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், போதைப்பொருள் வைத்திருந்ததாகச் சந்தேகத்தின் பேரில், சிலாங்கூரில் கைது செய்யப்பட்டார்.

ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் (Sprint Highway) உள்ள டாமன்சாரா சுங்கச்சாவடிக்கு (Damansara Toll Plaza) அருகில், அந்த இளைஞர் தனது காரை அதிவேகமாகப் பின்னோக்கி ஓட்டிச் செல்வதைக் கண்ட காவலர்கள், அவரைத் துரத்திச் சென்று, கி.மீ 0.6-இல் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், அவரது காரைச் சோதனையிட்டபோது, ஹெராயின் போதைப்பொருளும், போதைப்பொருள் பயன்படுத்தும் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞன் பெட்டாலிங் ஜெயா போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு, அழைத்துச் செல்லப்பட்டான்.

அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட இளைஞருக்கு ஏற்கெனவே இரண்டு போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணிகள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான், இந்த வழக்கு, தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here