கோலாலம்பூர்:
ஷா ஆலாம், செக்ஸன் 24-இல் (Seksyen 24) உள்ள ஒரு பட்டறையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 37 கார்களும் ஏழு மோட்டார் சைக்கிள்களும் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.
இந்தச் சம்பவம் குறித்து, இரவு 11.31 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் இலக்கா தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக, ஷா ஆலாம் மற்றும் ஜெலுத்தோங் (Jelutong), தீயணைப்பு நிலையங்களிலிருந்து, மூன்று தீயணைப்பு வாகனங்களும் ஒரு தண்ணீர் டேங்க்யுருடன் 21 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனிடையே பட்டறைக்குத் தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, 50-க்கு 100 சதுர அடி கொண்ட அந்தப் பட்டறை, ஏற்கனவே 90% எரிந்து நாசமாகியிருந்தது.
இந்த தீ விபத்தில் யாரும் சிக்கவில்லை என்றாலும், ஒரு வாகனத்தை அகற்ற முயன்ற பட்டறை ஊழியர் ஒருவருக்குக் கையில் தீக்காயங்கள் ஏற்பட்டன.
எனவேதான் தீக்காயங்களுக்கு உள்ளான அவர் தனது குடும்பத்தினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .





















