பத்தாங் காலி: பெருடூவா தொழிற்சாலையில் தீ விபத்து – RM40 மில்லியன் சேதம்!

கோலாலம்பூர்:

உளு சிலாங்கூர் பத்தாங் காலி (Batang Kali) , பெருடூவா (Perodua) தொழிற்சாலைக்கு wire harness வழங்கும் கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஜாலான் இப்போ சாலையில் அமைந்திருக்கும் அந்தக் கடை, தீயில் 80% சேதமடைந்தது.

இந்தச் சம்பவம் குறித்து, அதிகாலை 4.45 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

கோலா குபு பாரு (Kuala Kubu Bharu), புக்கிட் செந்தோசா (Bukit Sentosa) மற்றும் ரவாங்கிலிருந்து (Rawang) மொத்தம் 26 தீயணைப்பு வீரர்கள், மூன்று தீயணைப்பு வாகனங்கள், ஒரு தண்ணீர் வண்டியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுமார் 100-க்கு 80 சதுர அடி கொண்ட அந்த இரும்பு கட்டிடம், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை சென்றடைந்த போது, முழுமையாகத் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தீ, காலை 5.45 மணிக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்த விபத்தில், எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த மீட்புப் பணியில், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ மீட்புப் பிரிவுகள், ஒரு தண்ணீர் டேங்கர் வாகனம், இதர வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here